திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவுரை கூட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக மிரட்டி பணம் வசூலிக்க கூடாது, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தொல்லைகள் தரக்கூடிய எந்த செயலையும் செய்யக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரைகள் கூறினார். இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரைஹானா, சார்பு ஆய்வாளர் அனுஸ்யா, நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















