திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கொடைரோடு அருகே மருத்துவம் பயிலாமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மதுரையைச் சேர்ந்த போலி மருத்துவர் கனகராஜ்(54) என்பவரை நிலைய ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்





















