திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு ரத வீதியில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் சட்டவிரோதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தரக்கூடிய போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்த திண்டுக்கல், நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப்அகமது(32). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















