மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் ,
பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் (பொ) / துணை மேயர் தி.நாகராஜன் , தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 10 மனுக்களும், காலிமனை வரிவிதிப்பு வேண்டி 5 மனுக்களும், புதிய சொத்துவரி வேண்டி 12 மனுக்களும், இதர மனுக்கள் 19, பாதாள சாக்கடை இணைப்பு 9 மனுக்களும், தெருவிளக்கு 2 மனுக்களும் மற்றும் அடிப்படை வசதி வேண்டி 44 மனுக்களும், சுகாதாரம் தொடர்பான 2 மனுக்களும், நகரமைப்பு பிரிவு ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 2 மனுக்களும், என மொத்தம் 111 மனுக்களும் பெறப்பட்டது. இம்முகாமில், உதவி ஆணையாளர் தமிழரசன், நகர திட்டமிடுநர் முரளி, நிர்வாக அலுவலர் அகமது இப்ராகிம், உதவி வருவாய் அலுவலர் ஆனந்தம், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















