கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக செம்பொன்விளையை சேர்ந்த கிஷோர் கண்ணா (31). என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் அவர்களின் உத்தரவு மற்றும் கண்காணிப்பின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் BNS மற்றும் IT சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.




















