மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சமயநல்லூர் உட்கோட்டங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று (21.07.2026) காலை, தனித்தனியே சிறப்புப்படை அமைக்கப்பட்டு குழுவினர் சம்பவ இடங்களுக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகம் மெய்யனம்பட்டி சுடுகாடு பகுதியில் காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், 1) ரித்திக் (27). த/பெ.ஈஸ்வரன், துரைசாமிபுரம். 2) விக்ரம் (24). த/பெ.கிருஷ்ணன், அன்னம்பாறைப்பட்டி. 3) சரவணன் (28). த/பெ.செல்லப்பாண்டி, 4) வெங்கடேஷன் (23). த/பெ. பழனி, துரைசாமிபுரம் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்களில் தீபா 55, க/பெ.வனசாமி, தீபக் 24, த/பெ. வனசாமி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 5 கிலோ கஞ்சா, ஆட்டோ-1, ராயல் என்பீல்ட் புல்லட்-1, செல்போன்-4 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பொதும்பு சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை கோரிப்பாளையம் அருகேயுள்ள ஹான்ஷாபுரத்தைச் சேர்ந்த முகமது ஹரீப் (21). த/பெ. முஜீபுர் ரகுமான். முகமது முஷரப் (22). த/பெ. ரஹீம் ராஜா ஆகியோரை கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் செக்கானூரணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கருமாத்தூர் போஸ்ட் ஆபீஸ் அருகில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கோட்டையூர் காலணியைச் சேர்ந்த முனீஷ்வரன் (எ) ராமர் 20, த/பெ. செந்தில், ரமேஷ் (19). த/பெ. செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சக்கிலியங்குளத்தைச் சேர்ந்த சஞ்சய், விக்கி (எ) மாலி மற்றும் வாலாந்துரைச் சேர்ந்த வீரு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து Tapentadol tablets -100, இருசக்கர வாகனம் – 1, செல்போன்-1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக உசிலம்பட்டி நகர், செக்கானூரணி, அலங்காநல்லூர் காவல் நிலையங்களில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இன்று (22.07.2026)-ம் தேதி மேலூர் உட்கோட்டம் கீழவளவு காவல் நிலைய சரகப்பகுதியில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் செந்தில்குமரன் 43 மற்றும் கீழவளவு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹனீபா மகன் காதர் இப்ராஹிம் 48 ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 18 கிலோ குட்கா மற்றும் ஒரு இருசக்கர வாகனம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















