திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனஜெயன், நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜய் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடம் காட்டிய அன்பான அணுகுமுறை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
எந்த நேரத்திலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க முன்வந்த அவர்களின் சேவை அனைவராலும் நினைவுகூரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பணியிடத்திலும் சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்கி பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















