திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் (55). வயது மதிக்கத்தக்க பெண் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி இரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சம்பவத்தில் இறந்த பெண் யார்? இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















