திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே புதூரை சேர்ந்த காமாட்சி(27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்பாத்துரை அருகே செட்டியபட்டி ரோடு விஜயநகர் பகுதியில் பணம் வசூல் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எல்லப்பட்டி சேர்ந்த மோகன்குமார்(26). கலையரசன்(23). ஆகிய இருவரும் மறித்து சரமாரியாக தாக்கி ரூ.7,500 பணத்தை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மோகன்குமார், கலையரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.




















