திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீடு மேம்பாலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று சிக்கியது. இதையடுத்து, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின்போது டிராக்டரில் இருந்த மூவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தப்பியோடிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சிவ ராமகிருஷ்ணன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















