சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Dr. A. அமல்ராஜ் அவர்கள், காவல் ஆணையரக தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 2 கூடுதல் துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 62 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தேர்தல் தொடர்பான பணிகளை திறம்படவும், பொறுப்புடனும் மேற்கொண்டு சிறப்பான சேவையாற்றியதற்காக, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், காவல் துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையுணர்வை ஆணையாளர் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் இதேபோன்ற சிறப்பான பணியை தொடருமாறு ஊக்குவித்தார். காவல் துறையினரின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















