திண்டுக்கல்: பழனி பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரர் ராஜ்குமார், தேர்தல் பாதுகாப்பு பணியின் போது துணை ராணுவ படையினரின் துப்பாக்கியுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசமுத்திரம் பகுதியில் பணியில் இருந்தபோது, பாதுகாப்பு விதிகளை மீறி ஆயுதத்தை கையில் எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பணியின் போது ஆயுதங்களுடன் இவ்வாறு செயல்படுவது கடுமையான விதிமீறல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பழனி டிஎஸ்பி தனஞ்செயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.




















