திருவள்ளூர் :தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேக் சுக்ளா அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய எஸ்.பி யாக காவல் கண்காணிப்பாளராக விழுப்புரத்தில் பணிபுரிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் வி வி.சாய் பிரணீத் அவர்கள் காலை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இவர் 2018 ஆம் ஆண்டு பிஎஸ் பணியில் சேர்ந்த இவர் மதுரை மாநகர துணை ஆணையர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்
தொடர்ந்து போதைப் பொருள் கஞ்சா குட்கா குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் கிடைப்பதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்த விதமான ரவுடித்தனங்கள் அல்லது கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் குற்றங்களை உடனுக்குடன் கண்டறிதல் மற்றும் வழக்குகளை சரியான நேரத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் காவல்துறையினரின் மனிதாபிமான நடத்தையை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பது மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யவும் குற்றமில்லா மாவட்டமாக மாற்றவும் பொதுமக்கள் காவல்துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்



















