திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (10.06.2026) குரிசிலாப்பட்டு மற்றும் ஆலங்காயம் காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், வழக்கு ஆவணங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை பார்வையிட்டு அவற்றை முறையாக பராமரிப்பது குறித்து காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், காவல்துறையினர் பொதுமக்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் அணுகி அவர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இவ்வாய்வின் போது காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் கலந்துரையாடி, காவல் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.




















