திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதிமுறைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பாக நிலைநிறுத்தும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




















