திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற திரு. அக்க்ஷய் அனில் வாகரே அவர்களுக்கு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் காவல் துறை செயல்பட வேண்டும் என்றும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




















