திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் செயல்பட்டு வரும் காவல் பல்பொருள் அங்காடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்காடியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொருட்கள் விநியோகம் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பல்பொருள் அங்காடியின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும், காவல்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு அங்காடியில் தேவையான வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




















