திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட 34-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் சேவல் சண்டை சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் போதிய அளவு காவலர்கள் உள்ளனர் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















