திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சிறப்பு “ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்” காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை தடுப்பதாகும்.
இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில், மொத்தம் 94 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















