திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயிற்சி வகுப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் காதல் தோல்வியால் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















