திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் குழு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, வேடப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் என்பவரின் கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சுமார் 125 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் பூட்டு வைத்து சீல் வைத்ததுடன், லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனை திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















