திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட காவல் துணைக் காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















