திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து (TNPBF) மருத்துவ உதவி தொகை, மற்றும் உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 07 காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து ரூபாய்.2,64,321/– க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் வழங்கினார்கள்.




















