விருதுநகர்: தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 62வது விருநகர் மாவட்ட பேரவை கூட்டம நடை பெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ஜெய கணேசன் தலைமை வகித்தார். பிரகலாதன் முன்னிலை வகித்தார். விஜய லட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் மாவட்டத்துணைத் தலைவர் சண்முகராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். கால்நடை ஆய்வாளர் சங்க முன்னாள முன்னாள் பொதுச் செயலாளர் வேல்முருகன் . தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மனோகரன் சிவகங்கை மாவட்ட செயலாளர் மரிய அருள் செபாஸ்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில தணிக் கையாளர் கள் ராஜா முகமது, பாஸ் சுப்புராஜ சி ஆனந்தி மாநில செயலாளர், பெ.கண்ணன் மாநில துணைத் தலைவர் மற்றும் தோழர் ஜி.வெங்கடாசலம் மாநிலத் தலைவர் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கதிரவன் பொதுச் செயலாளர் நிறைவுரை ஆற்றினார்கள். ஜெயகணேசன் மாவட்டச்செயலாளர் ஆகவும் தோழர் தே.கோகுலகிருஷ்ணன் மாவட்ட
இணைச்செயலாளர் ஆகவும் தோழர் செ.ஈஸ்வரி திலகம் விருதுநகர் கோட்ட செயலாளர் ஆகவும் தோழர் இரா.பிரகலாதன் திருவில்லிபுத்தூர் கோட்ட செயலாளராகவும் தோழர் வி.விஜயலட்சுமி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகவும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தோழர் தே.கோகுல கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். இப்பேரவையில், கீழ்காணும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன த. வெ. க அரசின் தேர்தல் கால வாக்குறுதி படி , தமிழக முதலமைச்சர் அவர்கள் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்திட இப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
கால்நடை ஆய்வாளர் பயிற்சி விரைந்து தொடங்கி காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை இப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது
கால்நடை ஆய்வாளர் பணியிடம் ஒப்பளிக்கப்படாத கால்நடை மருந்தகங்களில் கால்நடை ஆய்வாளர்களுக்கு கூடுதல் பணி வழங்கக் கூடாது எனவும் இந்நிலை தொடருமானால் மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் துறை வாரிச் சங்கங்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தையும் இணைத்து மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறை
வேற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















