திண்டுக்கல் : திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து(28). என்பவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோயமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார்(29). சாணார்பட்டி, கோணப்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(35). ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















