இராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எம்ஜிஆர் நகரில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கேணிக்கரை போலீசார் இன்று காலை அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் மகன் மகாராஜா 65, அவரது மகன் சக்தி 21 ஆகியோர் சேர்ந்து குக்கரில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். போலீசாரை கண்டதும் மகாராஜா தப்பி ஓட்டம் பிடித்தார்.
சக்தியை பிடித்த போலீசார் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் மற்றும் சாராய ஊரல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மகாராஜாவை போலீசார் தேடிவருகின்றனர்


















