திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர்.




















