திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த வீரசின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (VAO) செந்தில்தாசன் இவர் ரவுண்ட்ரோடு பன்றிமலை சுவாமிகள் தெரு பகுதியில் அப்பா அம்மா ஹோம் கிளாசிக்கல் கிளினிக் என்ற பெயரில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் மக்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம், தடுப்பூசி போட வேண்டாம், மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டாம் என்று அவதூறு பரப்பியதாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி புகார் அளித்தார். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த் குமார் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















