திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவரது மகன் முருகேசன் வயது 24, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் முருகேசன் அவருடைய தாய் முருகம்மாள் மற்றும் அவரது தங்கை தமிழ்ச்செல்வி மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்,
இவரது அத்தையின் கணவர் நேற்று விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்,
தனது மாமாவை மருத்துவமனையில் பார்ப்பதற்காக வந்த முருகேசன் மாமாவிற்கு ஆபரேஷன் சம்பந்தமாக காப்பீட்டு அட்டை பெறுவதற்காக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் சென்று தனது இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு திரும்ப சென்ற போது.
நான்கரை மணி அளவில் திருவள்ளூர் தபால் நிலையம் அருகே சாலையோரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற முருகேசன் மீது மோதியதில் முருகேசன் நிலைதடுமாறி அருகில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன பேருந்தின் அடியில் விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது முருகேசன் பாட்டியும் நேற்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்திகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாய் சுற்றி திரியும் கால்நடைகளால் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 35 விபத்து ஏற்பட்டதாகவும் இதில் 17 நபர்கள் உயிர் இழந்து உள்ளனர்.
எனவே கால்நடைகளை பராமரிக்காமல் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1997 படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5ஆயிரம் வரை அபராதமும் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மாடுகள் மோதி சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிகழ்வு பொதுமக்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை



















