திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மதுவிலக்கு DSP வினோதினி தலைமையில், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் ராம்சேட் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கொடைரோடு டாஸ்மாக் அருகே அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த முத்துப்பாண்டி (31). விஜி (49). ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2016 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















