கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கல் நத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் சட்டவிரோதமாக மதுபானத்தை கள்ளத்தனமாக அதிக அளவில் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P. தங்கதுரை, IPS அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் ,குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் , போலீஸ் பார்ட்டி சகிதம் சோதனை செய்து மதுபானத்தை கள்ளத்தனமாக கடத்தி சென்ற குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















