மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரும்பனூர் கிராமத்தில், கடந்த 26.06.2017 அன்று குடும்பத் தகராறு காரணமாக கணேசன் (54). என்பவரைத் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சோனை, சேதுராமன் (எ) முத்தையா, அழகுமணி, சுரேஷ், தெய்வநாதன், ராமநாதன், மலையாளம், மலைச்சாமி, கன்னாமணி, சசிகலா, பொன்முடி மற்றும் ஜெகதீஸ் ஆகிய 12 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த மேலூர் சார்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சோனை மற்றும் சேதுராமன் (எ) முத்தையா ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அழகுமணி, தெய்வநாதன், மலையாளம் மற்றும் ஜெகதீஸ் ஆகிய நான்கு பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நேற்று (28.11.2026) தீர்ப்பளித்தது. கொலை முயற்சி உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர மதுரை மாவட்ட காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















