திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாநில எல்லை சோதனைச் சாவடியான கொத்தூர் சோதனைச் சாவடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் இயற்கை கனிமங்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்யவும், 24 மணி நேரமும் CCTV-கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
S




















