கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மூலம் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன், சட்டம்-ஒழுங்கு நிலைமையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த சிறப்பு நடைரோந்து பணி மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.




















