திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு, காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் நடைபெறுகிறது. தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















