திருப்பத்தூர்: தமிழ்நாடு அரசு நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சாதனை புரிந்த காவல் துறையினரின் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V.சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (13.05.2026) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து, கல்விச் சாதனையை பாராட்டி Educational Prize வழங்கினார். மேலும், மாணவர்கள் எதிர்காலத்திலும் கல்வியில் சிறந்து விளங்கி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.




















