திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, காவலர்களின் உடற்தகுதி, அணிவகுப்பு ஒழுங்கு மற்றும் பயிற்சி செயல்பாடுகளை மதிப்பீடு செய்த அவர், காவல் பணியில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தினசரி உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் பணித்திறனை மேம்படுத்த உடல் தகுதியை தொடர்ந்து பேணிக்காக்க வேண்டிய தேவைகள் குறித்தும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து, காவல்துறையினர் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வில் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



















