திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் வயது 43 வெண்ணை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சிக்கு காரில் சென்று விட்டு, வந்து கொண்டிருந்தார். மானூர் ஆற்று பாலம் அருகே வரும் பொழுது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கியது. இதில் அங்குராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதில் அவரது மனைவியும், கார் டிரைவரும் படுகாயம் அடைந்தனர். இது பற்றி பழனி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.




















