கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சைபர் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 320 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் அவர்கள், மீட்கப்பட்ட செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சைபர் பிரிவு போலீசாரை பாராட்டினார்.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செல்போன் தொலைந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவோ அல்லது Tamil Nadu Police Citizen Portal மற்றும் CEIR Portal மூலம் புகார் பதிவு செய்து செல்போனை Block செய்யலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.




















