திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த ஜெரால்டு மகன் ஆண்டனிஅத்விக், அருண்ராபர்ட் மகள் சார்லி ஆகிய இருவரும் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகள் இருவரும் பழனி செல்லும் பேருந்தில் செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் பேருந்தை துரத்தி சென்று நிறுத்தி 2 குழந்தைகளை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து உரிய அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். காணாமல் போன 1 மணி நேரத்தில் குழந்தைகளை மீட்ட போலீசாரே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















