திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் காட்டு மாடை வேட்டையாடிய இரண்டு கேரளா நபர்கள் கைது மூன்று கேரளாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓட்டம் மூன்று ஏர்கன் துப்பாக்கிகள் தோட்டா மற்றும் அரிவாள் கத்தி ஒன்பது கிலோ கறி கைப்பற்றப்பட்டது. மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















