திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே பெரும்பாறை பகுதியில், காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அமுதா (64). நாகவல்லி (50). ஆகிய இருவரை புதரில் மறைந்திருந்த காட்டு மாடு தாக்கியது. இதில் இருவரும் கடுமையாக காயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















