திருச்சி: மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 310 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















