திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரவிந்தனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தாளைக்கடை பிரிவு அருகே உள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தார். இந்நிலையில் கடமான் குளம் கள்ளக்காதல் விவகாரம் கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்த கணவரை சிறுமலை செக்போஸ்ட் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















