கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.R .ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்நிலையில் வில்லுக்குறி மடத்தட்டுவிளை பகுதி சேர்ந்த தாவீது என்பவரின் மகன் ஜெயபாலன் (54). என்பவர் வில்லுக்குறி மாந்தோப்பு பகுதி சேர்ந்த எலியாஸ் வைத்தியர் என்பவரின் மகன் டேவிட் மைக்கேல் ராஜ் (27). என்பவரை வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் முன்னோரதம் காரணமாக கொலை செய்த நிலையில் இரணியல் காவல் நிலையத்தில் 302 IPC சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள். நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த குளச்சல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.




















