கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்துவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சிப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், நடைரோந்து பணியின் போது பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் காவல்துறை–மக்கள் உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடைரோந்து பணிகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















