மதுரை: மதுரை மாவட்டம், அப்பந்திருப்பதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கள்ளந்திரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (23.07.2026) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது 1) ராமலட்சுமி (70). 2) போதும்பொண்ணு, (55). 3) சின்ன பிடாரன் (20). ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்ட காவல்துறை, சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.




















