திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27). அருண்குமாா் (25). திமோராஜ் குட்டி (28). இசக்கிமுத்து (27). முத்துகுமார் என்ற ரீகன் (24). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவிட்டார். அதன் பேரில் 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (08.03.26) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















