திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில், திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக (18.05.2026) ஏலகிரி மலை கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு CSI Meeting Hall-ல் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இணையவழி நிதி மோசடிகள், OTP மோசடி, போலி அழைப்புகள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இத்தகைய குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அதேபோல், சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் தேசிய இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் இலவச உதவி எண் 1930 பற்றியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.




















