திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மரு.பிரதீப் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை துவக்கி வைத்தார். மேலும் இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் தெரிவித்ததாவது வேடசந்தூர் சரி துணை கண்காணிப்பாளர். பவித்ரா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முனியம்மாள், பிரதீபா காவலர்கள் சுகப்பிரியா, ராதிகா, சரண்யா, நித்யா ஆகியோர் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த அதிரடிப்படைக்காக புதிய மஹிந்திரா bolero வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் 4 திசைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















